இஸ்ரேலில் நடைபெற்று வரும் மோதல் நிலைமைகளில் சிக்கி 03 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுஜித் பிரியங்கரா என்ற இலங்கையர், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் தூதரகம் அவரை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் நிமல் பண்டார மேலும் கூறினார்.
அதேநேரம் காணாமற்போன மற்றுமொரு பெண் மற்றும் ஒரு இளைஞன் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை என்றும் இதற்கு மேலதிகமாக காஸா பகுதியில் பணிபுரியும் 20 இலங்கையர்கள் இன்று அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.