Monday, March 10, 2025

சீரற்ற வானிலை : நோய் தொற்றுக்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு நோய்களும், ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகரித்து டெங்கு போன்ற நோய்களும்  பரவுவதை நாம் எதிர்பார்க்கலாம் எனக் கூறினார்.

மேலும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களை சுத்தப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உணவு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உணவு நுகர்வு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அவர், ஈக்கள் மற்றும் தூசியால் வெளிப்படும் உணவுகளை விற்பனை செய்வது, அனைத்து கடைகளையும் சரிபார்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேவண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular