- Advertisement -
- Advertisement -
அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (11.10) முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரை காரில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -