இஸ்ரேலில் வசித்த அனுலா ரத்நாயக்க என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சியொன்றை அவரது உறவினர்கள் முகநூல் சமூக ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்க்காணலில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அவரது உடல் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அது அவரது சொந்த உடல் என்று உறுதிப்படுத்தப்படும் வரை, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமல் போன இரு இலங்கையர்களைத் தவிர, இஸ்ரேலில் வசிக்கும் ஏனைய இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.
தூதரகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இஸ்ரேலில் ஏறக்குறைய 8,000 இலங்கையர்கள் வாழ்கின்றனர். 2021 ஆம் ஆண்டில், இலங்கையில் இருந்து 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.