Saturday, March 15, 2025

யாழில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணம் பெதுருதுடுவ பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கைது செய்துள்ளனர்.

27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெதுருதுடுவ அல்வாய் பகுதியில் சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரை தாக்கிவிட்டு அவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் பெதுருதுடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் திருட்டு சம்பவங்களில் சந்தேக நபர் ஆவார். சம்பவம் தொடர்பில் பெதுருதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular