- Advertisement -
- Advertisement -
மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மற்றும் பொலிஸாருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “உரிமை இழந்தோம் காணிகளையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா. தோல்வி நிலையென நினைத்தால் தன்மான தமிழன் வாழ்வை நினைக்கலாமா?
எமது அறவழி போராட்டம் எமது மக்களுக்காக எந்த தடை வந்தாலும் உரிமை கிடைக்க மட்டும் என்றும் தொடரும். இன்றைய தினம் பண்ணையாளர்களுடன் போராட்டக்களத்தில்” எனப் பதிவிட்டு ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார்.
- Advertisement -