- Advertisement -
- Advertisement -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாள் விஜயமாக மட்டகளப்பிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மயிலந்தனை மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வுக் கோரி பண்ணையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு செங்கல்லடியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தின்போது பொலிஸாருக்கும் – போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -