மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(08.10) சந்திக்கவுள்ளார்.
நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மட்டக்களப்புக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நியாயமானதும் நிரந்தமரமானதுமான தீர்வு வழங்குமாறு கோரி போராடி வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை சந்திக்கவுள்ளார்.
பண்ணையாளர்கள் சார்பில், பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீ.தியாகராசா செயலாளர் பா.பரசுராமன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசியர் த. ஜெயசிங்கம் அடங்கிய மூவர் கொண்ட குழுவினர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
இதன்போது குறித்த பிரச்சினைக்கு சாதகமான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.