Saturday, April 5, 2025

கொழும்பில் பாரிய விபத்து : 22 பேர் காயம்!

- Advertisement -
- Advertisement -

கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும், கொள்கலன் ரயில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (06.10) விபத்துக்குள்ளாகியது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில், பேருந்துக்கு பின்னால் பயணித்த கொள்கலன் வாகனம் ஒன்றும் பேருந்துடன் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கஜுகம பிரதேசவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular