Tuesday, April 8, 2025

இனிமேலும் காதல் வரலாம்..! சாமி தரிசனம் செய்துவிட்டு பரபரப்பை கிளப்பிய வனிதா

- Advertisement -
- Advertisement -

நட்சத்திர தம்பதிகளாக விஜய்குமார் மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜய்குமார். இவர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.அதன் பின்னர் பெரிதாக எந்தப் படத்திலும் நடிக்காத வனிதா,நீண்ட இடைவெளிக்குப் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பொஸ்ஸில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்டதன் பின்னர் இன்னும் பிரபலமானார்.

அதற்குப் பின்னர் விஜய் டிவியின் இன்னுமொரு நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார்.இந்நிலையில் இவர் தற்போது வெள்ளித்திரையில் தனது 2ஆவத இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.அதாவது,இவர் தற்போது பல தமிழ் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் பத்தாயிரம் நன்கொடை செலுத்திய அவர், ஏழுமலையானையும் மனம் உருக பிரார்த்தித்துள்ளார்.பிரார்த்தனைகளை முடித்ததும் கோயிலுக்கு வெளியே வந்த வனிதாவுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை வனிதா, “தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளேன்.வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருப்பதி வந்தேன்.தற்போது சிறந்த படங்கள், நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன.

இதை ஒரு பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கிறேன்” என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு இன்னொரு முறை கூட காதல் வரலாம், அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் ்எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA