- Advertisement -
- Advertisement -
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித், பேருந்து கட்டணத்தை குறைந்தது 05 வீதத்தால் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு கோரியுள்ளார்.
நேற்று (01.10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவாலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -