மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது குறித்த கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் உண்மைகளை இன்று (02.10) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அனல் மின்சாரத்தைப் பெறுவதற்கு செலவிடப்படும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை விதிக்குமாறு இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி கட்டண திருத்த முறைக்கு முன்னர் விலையை அதிகரிப்பதற்கான கோரிக்கை இது என்பதால் இது தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் இரண்டு நாட்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.