Thursday, January 2, 2025

நிபா வைரஸால் இலங்கை அச்சப்பட தேவையில்லை!

- Advertisement -
- Advertisement -

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 நிபா வைரஸ் வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த 22 ஆம் திகதியில் இருந்து புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த 700இற்கும் அதிகமானோர் கண்காணிப்பில் உள்ளனர்.

நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இலங்கைக்கான ஆபத்து மிகவும் குறைவு எனவும் தொற்றுநோயியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும் என தொற்றுநோய்வியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular