Monday, March 10, 2025

கிளிநொச்சியில் நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

- Advertisement -
- Advertisement -

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, ஹபராதுவ, கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற குழந்தையொன்றும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போன 14 வயது சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு குழுவினருடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த போதே குறித்த பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular