Tuesday, April 1, 2025

வவுனியாவில் காணியொன்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு!

- Advertisement -
- Advertisement -

வவுனியா – மூன்றுமுறிப்பு, சாச்சாங்குளம் பகுதியில் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து நேற்று (30.09) கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக வவுனியா காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்வ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அக்கிணற்றை சோதனையிட்டுள்ளனர். இதன்போதே 14 கைக்குண்டுகளும் வேறு சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular