- Advertisement -
- Advertisement -
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதியில் கடும் மழை காரணமாக அடர் பனிமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்திற்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வார இறுதியில் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் எனவும் வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை ஏற்றி மெதுவாக வாகனத்தை செலுத்துமாறும் நுவரெலியா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -