Sunday, December 29, 2024

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

- Advertisement -
- Advertisement -

இலங்கையில் பணி புரியும் பெண்கள் பலர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டிய அவர், பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே சோதனைக்கு செல்வதாக கூறியுள்ளார்.

இதனால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாகவும் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளில் 26 பேர் மார்பகப் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular