குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்துள்ளார்.
பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காக அமைப்பதற்கு இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அவர் முன்மொழிந்துள்ளார்.
குருந்தி ரஜமஹா விகாரை பௌத்த தொல்பொருள் இடமாக தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நிலம் தொல்லியல் ரீதியாக ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் சொந்தமானது என்றார்.
இதேவேளை வடக்கில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு குழு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குருந்தி ரஜமஹா விகாரை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு துறைசார் கண்காணிப்புக் குழு கூடியபோ இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.