Friday, March 28, 2025

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கைது – வாழைச்சேனையில் சம்பவம்!

- Advertisement -
- Advertisement -

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் இன்று (27.09) இடம்பெற்றுள்ளது.

கணவன்,  மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு, கைகலப்பாக மாறியதில், கணவன் இந்த கொடூர செயலை செய்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை குளியலறையில் வைத்து கழுத்தை அறுத்தது, கையை வெட்டியதாகவும் .இதனையடுத்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் கூக்குரலிட்டபோது அயலவர்கள் வந்து பெண்ணுக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

பலத்த காயங்களுக்கு உள்ளான பெண்  வாழைச்சேனை ஆதார வைத்தியைசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular