Monday, March 10, 2025

கனடாவில் இருந்து வந்த இருவர் மீது தாக்குதல்!

- Advertisement -
- Advertisement -

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டள்ள நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து வருகைதந்திருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 150 வருடத்தை நிறைவுசெய்யும் முகமாக பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறாக கனடாவில் இருந்து வருகை தந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தாக்குதலுக்கு உள்ளான நபர், இது குறித்து பொலிஸ் நிலையத்திலும், கனடாக   தூதரகத்திடமும் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular