- Advertisement -
- Advertisement -
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (25.09) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வலவ்வென பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -