Monday, March 10, 2025

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

- Advertisement -
- Advertisement -

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் பயணத்தை மேற்கொண்ட குறித்த இருவரும் இன்று (25.09) அதிகாலை, தனுஷ்கோடி பகுதியில் இறங்கியதாக கூறப்படுகிறது.

58 மற்றும் 60 வயதுடைய இருவரே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

தமிழக பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின் அவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular