Monday, March 10, 2025

வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்!

- Advertisement -
- Advertisement -

மேல் மாகாணத்தில் கணனி முறைமை மேம்படுத்தப்படுவதால் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்,  வருவாய் உரிமம் வழங்குவது செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 02, 2023 வரை இடைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 26ஆம் திகதி முதல் காலாவதியாக உள்ள வாகன வருவாய் உரிமங்களை அக்டோபர் 10ஆம் திகதி வரை தாமதமான அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.motortraffic.wp.gov.lk ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது நேற்று (24.09) நள்ளிரவு முதல் 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular