Monday, March 10, 2025

பூங்காவில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட 24 இளம் ஜோடிகள்!

- Advertisement -
- Advertisement -

ஹோமாகம நகரில் இயங்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான தோட்டத்தில் சிறிய மூடிய அறைகளில் மைனர் சிறார்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி இன்று (24.09) ஹோமாகம தலைமையக பொலிஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த பூங்காவிற்குச் செல்லும் போது மூடப்பட்ட சிறிய அறைகளில் பாடசாலைச் செல்லும் சிறுவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதியின் பெற்றோர்கள் மற்றும் மதத் தலைவர்கள் செய்த முறைப்பாட்டு தொடர்பில், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது, ​​அறைகளில் அநாகரீகமாக நடந்து கொண்ட சுமார் 24 இளம் ஜோடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர், அனைத்து குழந்தைகளையும் அழைத்து, உண்மைகளை விளக்கி, அறிவுறுத்தல்களை வழங்கிய பொலிஸார், சிறுமிகளின் பாதுகாவலர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த குழந்தைகள் பலர் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வந்திருப்பது தெரியவந்தது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது பூங்காவின் உரிமையாளர் காவற்துறை அதிகாரிகளுடன் காரசாரமாக உரையாடியதாகவும் இதனால் பதற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular