தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் முறை இரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக ரயில் கட்டணமும் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் அதிகாரம் வழங்கியதன் பின்னர் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே திணைக்கள பிரதானிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலின்போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, ரயில் கட்டணங்களையும் பஸ் கட்டணத்திற்கு இணையான வீதத்தில் உயர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பருவச் சீட்டு முறையை இல்லாதொழிப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும், அந்த வருமானத்தில் இருந்து ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 19,000 ஊழியர்களைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ரயில்வே திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதே இந்த முன்மொழிவுகளுக்குக் முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.