- Advertisement -
- Advertisement -
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
யாழ் வருகை தந்த அவரை, ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார்.
அதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் கோண்டாவில் அமைந்துள்ள மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பாரிய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -