- Advertisement -
- Advertisement -
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (24.09) காலை இடம்பெற்றுள்ளது.
இதில் ஆராச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக எதிர் திசையில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -