தினம் தினம் புதுமையான விடயங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பிரபலங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவை நம் அனைவருக்கும் தெரியும். இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இத்தோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து தனது கணவரின் திரையுலக செயற்பாடுகளுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து வருகிறார்.அண்மையில் ரோபோ ஷங்கரின் மெலிந்த உடல்நிலையைப் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில், அவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்திருந்தார் பிரியங்கா. அது மிகவும் வைரலானது.
இந்நிலையில் இவர் தற்போது மணப்பெண்ணைப் போல் அலங்கரித்து ஃபோட்டோ ஷூட் ஒன்றை செய்துள்ளார்.அதில் நம்ம பிரியங்காவா இது? என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு மிகவும் அழகாக தோற்றமளிக்கிறார்.
இவ்வாறு தனது ஃபோட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு, ‘மாற்றங்கள் என்ற ஒன்றை இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகிவிட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது’ என்ற கெப்ஷனையும் போட்டுள்ளார்.