Monday, March 10, 2025

வவுனியா – பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை!

- Advertisement -
- Advertisement -

வவுனியா – பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா – பண்டாரிக்குளம் பிரதான வீதி, பண்டாரிக்குளம்- தவசிகுளம் பிரதான வீதி, பண்டாரிக்குளம் – வேப்பங்குளம் பிரதான வீதி என்பவற்றை புனரமைப்பதற்கான கோரிக்கைகள் பல காலமாக முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் உள்ளடங்கிய குழுவினர், கிராம மட்ட அமைப்புக்களுடன் குறித்த வீதியை இன்று (22.09) பார்வையிட்டதுடன், அதன் தூரங்களும் அளவீடு செய்யப்பட்டன.

இதனையடுத்து குறித்த வீதியை விரைவாக புனரமைப்பு செய்ய துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular