மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கும்புக்கன அந்தரமண்டியில் வசிக்கும் 12 வயதும் 06 மாதங்களுமேயான சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை காவல்துறையினரால் கடந்த (20) ஆம் திகதி அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் வந்து அவ்வப்போது பாலியல் வன்புணர்வு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 68 வயதுடைய முதியவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.