Sunday, March 9, 2025

வவுனியா இரட்டை கொலை வழக்கு : மூவருக்கு பகிரங்க பிடியாணை!

- Advertisement -
- Advertisement -

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அணிவகுப்பின் போதே குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து பெற்றோல் குண்டு தாக்குல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த வீட்டில் வசித்து வந்த இருவர் உயிரிழந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்,  அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளாதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாகியுள்ள மூவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வழக்கு விசாரணை எதிர்வரும் (05.10.2023) ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular