- Advertisement -
- Advertisement -
இந்த வருடத்தில் (2023) நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான யோசனைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19.09) தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார் கவிரத்ன முன்மொழிந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த யோசனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் அமைச்சர் கூறினார்.
- Advertisement -