Sunday, March 9, 2025

தியாக தீபம் திலீபனை கொழும்பில் நினைவுக்கூற தடை!

- Advertisement -
- Advertisement -

தியாக தீபம் திலீபனை கொழும்பில் நினைவு கூறும் நிகழ்வுகளுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது குறித்த உத்தரவை குாட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (19.09) பிறப்பித்துள்ளது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்’ என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்வுகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

இதனையடுத்தே நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular