இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் என் லிங்குசாமி தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’. இப்படம் யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.இப்படத்தில் விக்ரம் பிரபு,லட்சுமி மேனன்,தம்பி ராமையா,அசுவின் ராஜா போன்ற பிரபலகள் இப்படத்தில் நடித்துள்ளனர்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி .இமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் முகுந்த வவேற்பு பெற்றது.இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது.2012 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
இந்த படத்தில் பொம்மன்என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு . இவர் தந்தை பிரபு தாய் புனிதா . நடிகர் விக்ரம் பிரபுவின் தந்தை பிரபல முன்னணி நடிகர். இவர் தாத்தா தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள்.இவர் லண்டனில் சான் டியாகோவில் படித்து, எம்பிஏ படிப்பை முடித்தார். அதன் பிறகு சந்திரமுகி படத்திற்காக உதவியாக சென்னை திரும்பினார். ‘சர்வம்’ பட தயாரிப்பின் போது விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.
இவர் தமிழில் இவன் வேற மாதிரி, வெள்ளைக்கார துரை, நெருப்புடா, பக்கா, அசுர குரு, தனக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’இதில் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் பார்த்திபேந்திர பல்லவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் பாயும் ஒலி நீ எனக்கு ,ரெய்டு போன்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரம் பிரபு தொழிலதிபர் எம் மதிவாணனின் மகள் லட்சுமி உஜ்ஜைனி திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது .தற்போது இவரின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.