Saturday, April 19, 2025

யாழில் முச்சக்கரவண்டி விபத்து: பெண் ஒருவர் காயம்

- Advertisement -
- Advertisement -

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அண்மித்த A-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்றையதினம் (17.09.2023) பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியுடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அண்மித்து கிளை வீதி ஒன்றின் ஊடாக வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் அதில் பயணித்த பெண் காயமடைந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular