- Advertisement -
- Advertisement -
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14.09) நேற்று இடம்பெற்றது.
இதன்போது ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளகாற்சட்டையில் இ-1124 இலக்கத்துடன் கூடிய ஒரு தடயப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
எட்டாம் நாள் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்டம்பர் 06 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
- Advertisement -