Thursday, January 2, 2025

கிளிநொச்சியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயம்!

- Advertisement -
- Advertisement -

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (14.09) காணாமல்போயுள்ளார்.

கிளிநொச்சி புதுயன்குளம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிற்கு அருகில் மதுபான வியாபாரி ஒருவரை சுற்றிவளைப்பதற்காக சென்றப்போது அவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

சோதனையின் போது சட்டவிரோத மதுபானம் தயாரித்து வந்த சந்தேகநபர்கள் கால்வாயில் குதித்து நீந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular