Monday, April 14, 2025

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள்!

- Advertisement -
- Advertisement -

வவுனியா பொதுவைத்தியசாலையின் முன்பாக நேற்று (12.09) கனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமையவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் ‘மருந்துகள் இல்லை. சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது,  தனியார் மருத்துவத்தை வளர்க்க இலவச மருத்துவத்தை அழிக்காதே,  வைத்தியர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து,  திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமையில் கை வைக்காதே’என எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா பிரதிநிதிகள் வைத்தியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA