Friday, March 7, 2025

ரயில் ஊழியர்களால் அவதிக்குள்ளான மக்கள்!

- Advertisement -
- Advertisement -

இலங்கை ரயில்வே இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 119 திட்டமிடப்பட்ட குறுகிய தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தங்கள் மற்றும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (11.09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சரியான சம்பள விகிதங்கள் இல்லாத காரணத்தால்இ ரயில் என்ஜின் இயக்க பொறியியலாளர்களின் பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சேனநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தொடரூந்து சேவை பாதிப்பினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சனநெருசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதுடன். ஒருவர் பலியாகியுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular