Monday, March 10, 2025

வாகனம் ஒன்றில் வந்த 12 பேர் கொண்ட கும்பல்..! யாழில் பட்டப்பகலில் நடந்த கடத்தல்

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இளைஞரொருவர் இனம் தெரியாத வன்முறை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைய நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வாகனம் ஒன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட கும்பல், பழ வியாபாரியை தாக்கிவிட்டு கடத்திச் சென்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் காவல் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular