Sunday, March 16, 2025

வவுனியாவில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் பலி

- Advertisement -
- Advertisement -

வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடை சாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று (01.09.2023) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவியந்திரம் ஒன்று பயணித்துள்ளது.

இதன்போது தீடீர் என கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.இதனால் உழவியந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மஉயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA