- Advertisement -
- Advertisement -
விஜய் டிவி தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இந்நிகழ்ச்சி மூலம் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகியவர்களில் ஒருவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் போட்டியாளர் ஸ்ரீநிஷா.

அரையுறுதி சுற்று வரை தன் குரலால் ஈர்த்து வந்த ஸ்ரீநிஷா, பின்னணி பாடகியாக அவன் இவன் படத்தில் ஒரு மலையோரம் பாடல் மூலம் அறிமுகமாகினார்.அதன்பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்துள்ளார்.
23 வயதான ஸ்ரீநிஷா ஆல்பம் பாடல்களையும் பாடி அனைவரையும் ஈர்த்து வருகிறார்.தற்போது மலேசியா இசைக்கச்சேரிக்கு சக சூப்பர் சிங்கர் பிரபலங்களுடன் சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
- Advertisement -