Saturday, March 15, 2025

வவுனியாவில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்

- Advertisement -
- Advertisement -

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே இன்று (01.09) கரடி தாக்கியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular