Saturday, March 8, 2025

8 வருட திருமணம் வாழ்க்கை..!! விஜே பிரியங்கா விவாகரத்து செய்யாமல் கணவரை பிரிய இதுதான் காரணம்

- Advertisement -
- Advertisement -

ஸ்டார் விஜய் டிவியின் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. மாகாபா ஆனந்துடன் பல ஆண்டுகளாக இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள். தற்போது பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்றும் வருகிறார்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிரியங்கா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கியும் வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே பிரியங்கா கணவரை பிரிந்து அம்மா, சகோதரர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதன்பின் 2021ல் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கணவரை பற்றி துளிக்கூட பேசாமல் இருந்தார். இந்நிலையில் பிரியங்கா தன் கணவரை பிரிய முக்கிய காரணம் என்ன என்பதை பயில்வான் சமீபத்தில் மறைமுகமாக ஒரு பதிவின் மூலம் கணவரை பிரிய என்ன காரணம் என்று கூறியுள்ளார்.நம்மை புரிந்துக்கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என்பதை தெரிவித்துள்ளார்.

அதிலிருந்து தன்னை பிரவீன் குமார் புரிந்துக்கொள்ளாமல் இருந்ததால் தான் அவரை விட்டு பிரிந்து தன் அம்மாவுடன் வசித்து வருகிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular