விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.கலக்கப்போவது யாரு என்ற மேடையை சரியாக பயன்படுத்தி அதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதை கவர்ந்து இப்போது முன்னணி காமெடி நடிகராக முன்னேரி இருக்கிறார்.

குண்டாக காணப்படும் ரோபோ ஷங்கர் அண்மையில் நோய் பிரச்சனையால் அப்படியே முழுவதும் உடல் எடை குறைந்தார். இதனால் பல யூடியூப் பக்கங்களில் அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் வீடியோ பதிவிட்டார்கள்.
இதுகுறித்து ரோபோ ஷங்கரும் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.அதில் அவர், நான் 6 மாத காலம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தனிமையில் வாடிய நாட்களில் இருந்து வெர்ஷன் 2.0வாக மீண்டு வந்துள்ளேன்.
பாடி வருது, பத்து நிமிஷத்துல பாடி வந்துடும், மறைந்தார் ரோபோ சங்கர், ரோபோ சங்கர் மரணம், சோகத்தில் கதறிய குடும்பம் என்றெல்லாம் யூடியூப்வீடியோக்கள் போலியாக வெளியானது மனதை ரொம்பவே பாதித்தது என பேசியுள்ளார்.