தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

அஜித் நடிகை ஷாலினியை 2000 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சினிமாவை தாண்டி மற்ற நேரங்களில் அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன்பு பிரபல நடிகையின் மீது காதலில் விழுந்தாராம். இவர் நடிப்பில் 1996 -ம் ஆண்டு வெளியான வான்மதி என்ற படத்தில் ஹீரோயினாக ஸ்வாதி நடித்திருப்பார்.
அஜித் ஸ்வாதியை திருமணம் செய்துகொள்ள நினைத்து அவரது வீட்டிற்கு பெண் கேட்க சென்றுள்ளார். ஆனால் அப்போது ஸ்வாதியின் அம்மா இந்த திருமணத்திற்கு நோ சொல்லி அஜித்தை திட்டி அனுப்பினாராம். இவ்வாறு பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.