நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மகன்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுப்பணயம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்பு ஜெயம் ரவி பங்கர பிஸியாக படத்தில் நடித்து வருகின்றார். அடுத்தடுத்து பட வாய்ப்பினால் பம்பரமாக சுற்றுக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி குடும்பத்தினருடன் வெளியில் கூட செல்லாமல் இருக்கின்றார்.

ஜெயம் ரவி பிஸியாக இருந்து வருவதால் அவரது மனைவி ஆர்த்தி, அவரை கழற்றிவிட்டு தன்னுடைய மகன்கள், தாய் தந்தையுடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.முதலில் இங்கிலாந்து சென்ற அவர், அங்கு மகன்களுடன் ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து துபாய் சென்ற ஆர்த்தி அங்கு போட் ரைடு சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் சினிமா ஹீரோயின் போன்று இருப்பதாக கூறி வருகின்றனர்.இதே போன்று ஜெயம் ரவியின் மகன்கள் அப்பா முக சாயலில் கடகடவென வளர்ந்து நிற்பதையும் காணமுடிகின்றது.