- Advertisement -
- Advertisement -
வவுனியா – புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (18.08.2023) புதிய கற்பகபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
40 வயதுடைய ரூபன் எனும் நபரே, அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் வாகனம் திருத்தும் தொழில் புரிபவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை தன் கணவர் தூக்கில் சடலமாக இருந்ததை கண்டுள்ளார்.இதனையடுத்து பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
- Advertisement -