வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நடைபெற்ற ஏலத்தின் போது மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் நேற்று முன்தினம் (13ஆம் திகதி) விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் பூஜை பானைகள் மற்றும் பழங்கள் ஏலத்தில் விடப்பட்டதுடன், மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச்சென்றதுடன், பிரசாதம் வழங்கும் பானைகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டதோடு, இவ்வளவு தொகைக்கு மாம்பழம் ஏலம் போனது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் பெறப்படும் பணம் ஆலயத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆலயத்தின் தலைவர் தெரிவித்தார்.