நடிகர் விஷால் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. நடிகை வரலட்சுமி சரத்குமார் உடன் அவர் காதலில் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அது நட்பு மட்டும்தான் என விளக்கம் கொடுத்துவிட்டனர்.

அதன் பிறகு லட்சுமி மேனன் உடன் விஷால் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் பிரேக்கப்பில் முடிந்து விட்டது. அதன் பிறகு விஷால் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் அது நிச்சயதார்த்தத்தோடு முடிந்து போனது.
நடிகர் சங்க கட்டிடம் முடிந்தால் தான் திருமணம் என விஷால் கூறி இருந்தார். ஆனால் இன்னும் கட்டிடமும் முடியவில்லை விஷாலுக்கும் திருமணம் நடைபெறவில்லை.இந்த நிலையில் தற்போது விஷால் மீண்டும் லட்சுமி மேனன் உடன் காதலில் இருக்கிறார் என்றும் இரண்டு குடும்பத்தினரின் ஒப்புதலுடன்
விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த செய்தி உண்மையில்லை என விஷால் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.